அந்த வெறும் கைகளுக்கு துணையாய்
சோடி வளையல்கள்,
பார்க்கும் வேலையால், வியர்க்கும் வியர்வையால்
கவரிங் சங்கிலியால் கழுத்தில் வந்த புண்களை போக்க, தாய்க்கு
தங்க சங்கிலி,
ஒரு கட்டத்தில் மாடே தோற்றது வண்டி இழுப்பதில்
என் அப்பாவிடம், இவ்விடயத்தில் என் தந்தை தோற்க
குட்டியாணை-டாட்டாஏஸ்
மிதி, மிதி என்று மிதித்துக் கொண்டிருக்கிறார் 25 வருடங்களாய் .
சைக்கிளின் விடுதலை வேண்டி அப்பாக்கு
டிவிஎஸ் எக்ஸெல் சூப்பர்
படித்திருந்தாலும் வெளி உலகம் தெரியா என் அக்கா
அடிக்கடி மிரள்வாள் கணிணி கண்டு, அம்மிரட்சி போக்க
லேப்ட்டாப்
என்னிடம் பெண்ணியம் பேச, தனக்கான ஒரு தன்னம்பிக்கையயை வளர்க்க
அக்கா பெயரில்
பத்தாயிரம் பிக்சட் டெபாசிட்...
தான் படிக்க இயலாவிட்டாலும் வேலைக்கு போய்
என்னை படிக்க வைத்தவீட்டின் பிரபல "எலக்ட்ரீசியன்" தம்பிக்கு
நவீன டிரில் மிஷின் செட்
இத்தனையும் வாங்க வேண்டும் என் முதல் சம்பளத்தில்....
இவன் -
முதல் சம்பளத்தை எதிர் நோக்கி,
இன்டர்வியூவையே ஒரு வருட வேலையாய் பார்க்கும்
கையாளாகாத இஞ்ஞினியர்....
பிகு- சிவப்பு நிறம் குறிப்பது, வறுமையின் நிறத்தை....